பத்திரக்கோட்டை கிராமத்தில் ஊர் புற நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்திற்கு தினசரி 100 க்கும் அதிகமான வாசகர்கள் வந்து படித்து வருகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள இந்த நூலகத்தில் வைக்க போதிய ரேக் இல்லாததால் புத்தகங்கள் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பல புத்தகங்கள் பாதுகாப்பு கருதி கட்டு கட்டி வைத்தள்ளனர்.இதனால் புத்தகங்கள் இருந்தும் வாசகர்கள் அதை படிக்க முடியாத நிலை உள்ளது.மேலும் நூலக கட்டடத்திற்கு ஜன்னல் வைத்து கட்டாமல் சிமென்ட் ஜாலி வைத்து கட்டப்பட்டுள்ளதால் வரும் மழைகாலத்தில் பெய்யும் மழை சாரல் நூலக கட்டடத்தினுள் சென்று தரையில் அடுக்கி வைத்துள்ள புத்தகங்கள் வீணாகும் நிலை உள்ளது.
மேலும் மின்சார வசதி இருந்தும் மின்சார பொருட் களான லைட், மின்விசிறி போன்றவைகள் இல்லாததால் வாசகர்கள் இருட்டில் புத்தகங்கள் படித்து வருகின்றனர்.ஆகையால் உடனடியாக இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் அடுக்கி வைக்க ரேக் மற்றும் லைட், மின்விசிறி போன்ற வசதிகள் செய்து கொடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.