செவ்வாய், 5 நவம்பர், 2013
வியாழன், 24 அக்டோபர், 2013
பத்திரக்கோட்டை அரசு தொடக் கப் பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பில் தமிழ் வழி யில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற அரசு, நடப்பு கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விளைவு கடலூர் மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிக ளில் இந்த ஆண்டு, முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட தமிழ் வகுப்பில் சேரவில்லை.
தனது பிள்ளையும் ஆங்கிலம் படித்து பட்டணத்துக்குச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் என்று நம்புகிற பெற்றோர்களும், கல்வி கடைகளைத் திறந்து கல்லா கட்ட நினைக்கும் கல்வி தந்தைகளின் மனப்போக்கும்தான் இந்த இழிநிலைக்குக் காரணம்.
தொடக்கப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்துள்ளதன் விளைவாக - கடலூர் மாவட்டத்தில் உள்ள 161 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 12 நடுநிலைப் பள்ளிகளிலும் முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 109 மாணவ, மாணவியர்கள் ஆங்கில வழி முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மேற்கண்ட 161 தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆங்கில வழிக் கல்விக்கென கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை எனபதும், மேலும் தமிழ் வழிப் பள்ளிகளில் படிப்பவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகையும் ஆங்கில வழி மாணவர்களுக்கும் என்பதும்தான்.
"தமிழ் மொழிக்கான அபாய அறிகுறி இது. தொடக்கப் பள்ளிக ளால் ஆங்கில வழிக் கல்வி வழியை புகுத்தியிருப்பது பண்பாட்டுச் சீரழி வாகும்" என்கிறார் கல்வியாளரும் பேராசிரியருமான பிரபா கல்விமணி.
பத்திரக்கோட்டை அரசு தொடக் கப் பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பில் தமிழ் வழி யில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. ஆங்கில வழி முதல் வகுப்புக்கு 23 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழி சேர்க்கை குறைந்தது பற்றி கடலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசும்போது, "ஆங்கில வழி சேர்க் கைக்கு இணையாக தமிழ் வழியிலும் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், வருகிற பெற்றோர்கள் ஆங்கில் வழியில்தான் சேர்க்க விரும்புகின்றனர்’’ என்றார்.
தாய் மொழியைத் தவிர்த்து பிற மொழியில் கல்வி கற்கும்போது அந்தக் குழந்தைக்கு புரிதல் தன்மையில் குறைபாடு ஏற்படும் என்பது பெற்றோர்கள் உணரும்போதுதான் தமிழ் வழிக் கல்விக்கு எதிர்காலம்.
புதன், 29 மே, 2013
கூட்டுறவு வங்கி இட மாற்றத்திற்குஎதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
சிலம்பிநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை இடமாற்றம் செய்ய முயற்சிப்பதைக் கண்டித்து பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை கிராமத்தில் சிலம்பிநாதன்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இன்னும் சில தினங்களில் சிலம்பிநாதன் பேட்டைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனைக் கண்டித்து, பத்திரக்கோட்டை, ஆராய்ச்சிக்குப்பம், பட்டிக்குப்பம், பழைய பத்திரக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300 பெண்கள் உட்பட 800 பேர், நேற்று காலை 9:00 மணி முதல் வங்கி எதிரில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் தெய்வமூர்த்தியின் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் அலமேலு ஞானவேல், தேவராசு,
ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன், பா.ம.க., சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் குமுதம், டி.எஸ்.பி., கனகசபாபதி, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதப் போராட்டம் மாலை வரை நீடித்தது.

கூட்டுறவு வங்கி இடமாற்ற விவகாரம்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது
- கூட்டுறவு வங்கியை சிலம்பிநாதன்பேட்டைக்கு மாற்றுவது குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியில் உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தில் சிலம்பிநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 45 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதற்கிடையில் சிலம்பிநாதன்பேட்டையில் வங்கியை மாற்றிட 10 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.ஆனால் கட்டடம் திறக்காமல் வீணாகி வருகிறது. இந்நிலையில், பத்திரக்கோட்டையில் உள்ள கூட்டுறவு வங்கியை சிலம்பிநாதன்பேட்டையில் மாற்ற வேண்டும் என சிலம்பிநாதன்பேட்டை பகுதிமக்கள் கூட்டுறவுத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
- கூட்டுறவு வங்கியை சிலம்பிநாதன்பேட்டைக்கு மாற்றுவதற்கு பத்திரக்கோட்டை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து இரு கிராமங்களுக்கிடையே சமூக தீர்வு ஏற்பட பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் குமுதம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், துணைப் பதிவாளர் பார்த்திபன், துணை தாசில்தார் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இதில் சிலம்பிநாதன்பேட்டை தரப்பில் ஊராட்சி தலைவர் ரகுராமன் உட்பட 12 பேரும், பத்திரக்கோட்டை வைத்தியநாதன் உட்பட 12 பேரும் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிலம்பிநாதன்பேட்டைக்கு வங்கியை மாற்றுவதற்கு பத்திரக்கோட்டை பகுதி பிரதிநிதிகள் ஒப்புக் கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமுதம் தெரிவித்தார்.
45 ஆண்டுகளாக பத்திரக்கோட்டையில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியை அரசியல் உள்நோக்கத்திற்காக மாற்ற துடிக்கும் அமைச்சர்
கடந்த 45 ஆண்டுகாலமாக பத்திரக்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கியை தற்போது மாற்ற நிணைக்கிறது அரசு.
கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட் ஆரம்ப காலகட்டத்தில் அதன் முக்கியத்துவம் அறிந்து வங்கி செயல்பட காலம் சென்ற மருத்துவர் உயர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் அவருடைய சொந்த வீட்டில செயல் பட அனுமதித்தார்.
1968 முதல் 1997 வரை அவரின் இல்லத்தில் தான் இந்த கூட்டுறவு வங்கி செயல்பட்டது. 1997 ல் ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் கூட்டுறவு வங்கிக்கு என்று தனியாக ஒரு கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு பாத்திரக்கோட்டை பொதுமக்கள் அணைவரும் தங்களின் உடல் உழைப்பினை தந்து கட்னர்.
இப்படி மக்கள் பங்கேற்பு மட்டும் அல்லாமல் உடல் உழைப்பினையும் சேர்த்து உருவாக்கிய கட்டிடத்தில் தான் இந்த கூட்டுறவு வங்கி இன்று வரை செயல் பட்டுவருகிறது.
1968 முதல் 2006 வரை இந்த கூட்டுறவு வங்கிக்கு செயல் பட சொந்த கட்டிடம் வேண்டும் என்று அரசு எந்த வித நிதியும் ஒதுக்க வில்லை. 2007 ஆண்டு கூட்டுறவு வங்கிக்கு சொந்த கட்டிடம் இருக்கும் போதே அதற்கு சிலம்பிநாதன் பேட்டையில் தனி கட்டிடம் கட்டப்பட்டது. வங்கியை மாற்ற வில்லை
தற்பொது திடிர் என்று வங்கியை மாற்றுவது என்பது அரசுக்கும் அரசு அதிகாரிக்கும் நல்லது அல்ல.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)