சிலம்பிநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை இடமாற்றம் செய்ய முயற்சிப்பதைக் கண்டித்து பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை கிராமத்தில் சிலம்பிநாதன்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இன்னும் சில தினங்களில் சிலம்பிநாதன் பேட்டைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனைக் கண்டித்து, பத்திரக்கோட்டை, ஆராய்ச்சிக்குப்பம், பட்டிக்குப்பம், பழைய பத்திரக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300 பெண்கள் உட்பட 800 பேர், நேற்று காலை 9:00 மணி முதல் வங்கி எதிரில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் தெய்வமூர்த்தியின் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் அலமேலு ஞானவேல், தேவராசு,
ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன், பா.ம.க., சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் குமுதம், டி.எஸ்.பி., கனகசபாபதி, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதப் போராட்டம் மாலை வரை நீடித்தது.