- கூட்டுறவு வங்கியை சிலம்பிநாதன்பேட்டைக்கு மாற்றுவது குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியில் உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தில் சிலம்பிநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 45 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதற்கிடையில் சிலம்பிநாதன்பேட்டையில் வங்கியை மாற்றிட 10 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.ஆனால் கட்டடம் திறக்காமல் வீணாகி வருகிறது. இந்நிலையில், பத்திரக்கோட்டையில் உள்ள கூட்டுறவு வங்கியை சிலம்பிநாதன்பேட்டையில் மாற்ற வேண்டும் என சிலம்பிநாதன்பேட்டை பகுதிமக்கள் கூட்டுறவுத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
- கூட்டுறவு வங்கியை சிலம்பிநாதன்பேட்டைக்கு மாற்றுவதற்கு பத்திரக்கோட்டை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து இரு கிராமங்களுக்கிடையே சமூக தீர்வு ஏற்பட பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் குமுதம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், துணைப் பதிவாளர் பார்த்திபன், துணை தாசில்தார் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இதில் சிலம்பிநாதன்பேட்டை தரப்பில் ஊராட்சி தலைவர் ரகுராமன் உட்பட 12 பேரும், பத்திரக்கோட்டை வைத்தியநாதன் உட்பட 12 பேரும் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிலம்பிநாதன்பேட்டைக்கு வங்கியை மாற்றுவதற்கு பத்திரக்கோட்டை பகுதி பிரதிநிதிகள் ஒப்புக் கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமுதம் தெரிவித்தார்.
புதன், 29 மே, 2013
கூட்டுறவு வங்கி இடமாற்ற விவகாரம்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக