பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2012

பத்திரக்கோட்டையில் மருத்துவ முகாம்!


சென்னை (கிழக்கு) ராஜா அண்ணாமலை புரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.விஸ்வநாதன், செயலாளர் ஆரியோ பாபு, அடுத்த வருடத்துக்கான தலைவர் பி.டி.குமார், இளைஞர் நலன் பிரிவு இயக்குநர் பி.ரகு நாதன் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் மருத்துவ உதவிகள் செய்ய முன்வந்தனர்.
உடனடியாக, கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதி களில் ஆய்வு நடத்திய 'டாக்டர் விகடன்’ குழுவினர், பத்திரக்கோட்டை கிராமத்தைத் தேர்வு செய்தார்கள். கடந்த 21-ம் தேதி அங்கே மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டியைச் சேர்ந்த கண்-காது-மூக்கு, தோல், பொதுமருத்துவம், நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவம், மனநலம், எலும்பு, பல் போன்ற எட்டு பிரிவு களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் பத்திரக்கோட்டை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 550 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் செட்டிநாடு ஹெல்த் சிட்டி சார்பில் வழங்கப்பட்டன. மேலும், அப்பல்லோ பார்மஸி சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.  சிலருக்கு இதயநோய் போன்ற பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு செட்டிநாடு ஹெல்த் சிட்டியிலேயே அரசு காப்பீட்டைப் பயன்படுத்தி, இலவச மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக் கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக