பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட் டது. நடுவீரப்பட்டு - குறிஞ் சிப்பாடி மெயின் ரோட் டில் உள்ள இப்பள் ளியில் 600 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சாலையோரம் இருப்பதால் அந்த வழியில் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், கரும்பு அரவை சீசனில் நெல்லிக் குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் என எந்த நேரமும் வாகனங்கள் தொடர்ந்து சென்ற வண் ணம் உள்ளன.
மேல்நிலைப் பள்ளி மெயின் ரோட்டையொட்டி உள்ளதாலும், சுற்றுச் சுவர் இல்லாததாலும் மாணவ, மாணவிகள் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது சாலையை கடப்பதும், சாலையோரம் விளையாடியும் வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் சாலை வளைவாக உள்ளதால் வாகனங்கள் வருவது தெரியாமல் தினம் தினம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற் கொண்டு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக